Skip to main content

Posts

Showing posts from September, 2017

I LOVE YOU di

சந்தித்த வேளையில்  சம்மதம் என்றாய் காத்திரு என்றேன் கவலையில்லை என்றாய் கனவல்ல என்றேன் காதல் என்றாய் என்னை எப்போது மறப்பாய் என்றேன்?? . . . . தெரியும் போது உயிர் இல்லை என கூறிய உன்னை விட்டு நான் பிரிவேனா எத்தனை ஜென்மங்கள் எடுத்தாலும். I  LOVE   YOU  di .......

உன் நினைவில்

WhatsApp  இருந்தும் What's up னு  கேட்க நாதி இல்லை யே Facebook இருந்தும் Face பார்த்து பேச  எனக்கென யாருமில்லையே Hike இருந்தும் தனிமையில் நானும் நடக்கிறேன் ஆன உன் நினைவில்  மட்டும் எப்பவும் வாழ்கிறேன்...

உனக்காக காத்திருப்பேன்

கடுங்கோபம் கொண்டு வருகிறேன் கோபத்தை கொட்டும் வரை கண்மூடி இருந்து விடு என் கண்களில்  கண்ணீர் துளிகள்  பட்ட உடன் என்னுடன் ஒட்டி விடு ஏன் இந்த கடுந்தவம் எனக்கு காதல் எனும் வரம் வாங்கவா காணாத நாளை நினைத்து பார்க்க வா உன்னுடன் பேச ஆயிரம் தான் ஆச ஆசையெல்லாம் பேராசை ஆவதற்குள் வந்து விடு வருகைக்கு  உனக்காக காத்திருப்பேன். காலமெல்லாம் கலங்கியநெஞ்சோடு....

முட்டாள்

நான் மணந்தது மகாராணியை தான் என் மனமோ உன்னை நினைப்பது மகாராணியாக தான்  நீ அமர நினைத்தால்  மஞ்சம் என்றால் மார்பை காட்டுவேன் வெளிச்சம் என்றால் மடியை காட்டுவேன் நான் கைதி அல்ல காதலன் நான் அடிமை அல்ல உன் அன்புக்கு அரசன்.. உன் நினைவு நினைப்பதற்குள் நினைத்ததை முடிக்க ஆசை படும் முனிவன் அல்ல முடடாள் உன் அன்புக்கு மட்டும் ஏங்கும் முட்டாள்.....

என்னோட காதலி

ஒத்தையடி பாதையில் ஒரு ஓரமாய் நீ சாஞ்சி நடக்கையில் ஒவ்வொரு நொடியையும் ரசிக்கவா இல்லை  ருசிக்கவானு நினைப்பதை சொல்ல வார்த்தை தேடுகிறேன்... மழை துளியின் குளிர்ச்சி மனதுக்கு பிடித்தவளின்  நெகிழ்ச்சி மாமன் மனமோ  மகிழ்ச்சி மல்லிகைமணத்தோடு காது கடித்தால் மட்டும் சீீீசீ அட வாடீ வாடீ என்னோட காதலி.......

miss YOU so MUCH

உன்னை காணாத நாள் எல்லாம்  கண் மூடி இருக்கிறேன் கனவிலாது  கண் குளிர காண..... miss   YOU  so  MUCH .....

Miss u ppa

எத்தனை கனவு நினைத்திருந்தேன் அதனை இப்போது மறந்து விட்டேன் நினைவில் இருப்பதோ ஒரு கனவு உங்கள் பிரிவை கலைக்க விரும்புகிறேன் என் விருப்பத்தை செய்யும் என் அப்பா இந்த விருப்பத்தை நீங்க முடித்து வைத்தால் நான் மரணிக்கும் வரை வேறு விருப்பமில்லை Miss u ppa...

காத்திருக்கிறேன்

மங்கும் சூரிய வெளிச்சம் மணக்கும் மல்லிகை வாசம் மதி மயக்கும் பாவை கண்டதல்ல இப்படி பட்ட கண்னை காதலியாக நீ வருவாய் என கனவில்லும் நினைத்தும்மில்லை கனவு என்றால் கலைந்து விடுவாய் என்று கண்னெதிரே தோன்றினாயோ காத்திருந்த கண்ணனுக்கு கனவு கன்னி போல் காதலியா கட்டி தங்கம் உன்னை முத்திகொள்ள எத்தனை நாள் தவம் எத்தனை நாள் ஆசை உன்னோடு பேச உயிராக நான் இருக்க உணர்வாக நீ  இருக்க  காத்திருக்கிறேன் என் காதலியே....

உன்னை விட்டு பிரிய மாட்டேன்

அடியே என் காதலி ஆறு நாள் காய்ச்சலுக்கு ஒருநாள் கடைகண் பார்வையே மருந்தாகிறது என் கையை நீ பிடிக்க எந்தன் கையை நான் உடைப்பேன்.. என் கண்னை நீ காண கண்னு தெரியாதவனை போலும் நான் நடிப்பேன்.. தப்பி தவறியும் மற்றவர்களை போல் நானும் அழைக்க மாட்டேன் அழுதாலும் அனைத்து கொள்ளும் உன்னை விட்டு பிரிய மாட்டேன் பிரிந்த நாள் நான் மர்ணித்தநாள்....... Love u di chlm...

என் அன்பே

என்னோட பயணம் இரண்டே STOP ல் முடிகிறது END இல்லா பயணம் தொடர என்ன தவம் செய்வது... ஏதும் அறியா சிரிப்பு என்னை தெரியா மொரைப்பு ஒவ்வொரு நொடியும் சிறப்பு கண்விழி என்னை கண்டால் காதோரம் உன் மொழி கேட்டால் என் அருகே நீ இருந்தால் என்னகாகும் என யோசிக்கும் தருணமே உன்னை இன்னும் அதிகம் காதலிக்கிறேன் என் அன்பே....

முட்டாள்

என் உயிர் காதலை உந்தன் காதோரம் ஒரு முறையாவது சொல்ல நீ வேண்டும் உயிரே உனக்காக நானும்   காதலித்த உன்னோடு மட்டுமே வாழவேண்டும்" நீ இல்லா நாட்கள் நரகத்தின்   பயிற்சி   நாட்கள் பரிந்துரை செய்யாத   அழகு   பதுமை மொழி   நீ ஜெல் பென்   கொண்டஎழுதிய ஷார்ப் ஆன ரிதம்   நீ சிரிப்பு புன்னகையுடன் நான் வாழ இருக்கும் ஜீவனும் நீ.. கனிமொழியே   கனவு   காதலோடு   உனக்காக காத்திருக்கும் இதயம்   முரளி   அல்ல முட்டாள் ...

என்னோட காதலி

கலங்கி போகாதே கலக்கம் கொள்ளாதே கண்னே நீ இல்லாம் என் வாழ்க்கை செல்லாதே உயிரே உயிரே உனக்காக ஒவ்வொரு நொடியும் நான் வாழ்வேன் உன்னோடு வாழத்தான் உலகையும் எதிர்ப்பேனே எந்தன் நெஞ்சில் பாய்ந்த அம்பே நான் இறக்கும் வரை பிரியாதே அதுவரை நான் இறக்கும் நாலும் குறையாதே அட வாடீ வாடீ என்னோட காதலி....

என்னோட காதலி

அந்த இரவை வஞ்சிக்க நினைத்தேன் இரவோ வாஞ்சையோடு வானை பார் என்றது வானிலோ வான் மதி பக்கத்தில் வாசுகி முகம் பார்த்தும் வருத்தம் பறந்து என்ன ஒரு சுகம் எத்தனையோ இரவை இது தெரியாமல் கடந்து விட்டேன் கேட்காத கேள்வியும் கேட்டு விட்டேன் கேட்டதுக்கு sorry பாத்ததுக்கு happy அட வாடீ வாடீ என்னோட காதலி

காத்திருக்கிறேன்

என்னை காணாத கண்ணிர்க்கு காத்திருக்கிறேன் நானும் கன்னி உன்னை காணும் வரை கலங்கா நெஞ்சும் வேணும் கடைசி வரை நான் இருப்பேன் காத்து மட்டுமல்ல காதலுடன் அட வாடீ வாடீ என்னோட காதலி என் மொபைலும் உன் பெயரை தவிர வேர ஏதும் ஒலிக்காது உந்தன் பெயரை கண்டால் என் கண்கள் மறக்காது நான் பேசும் பத்து வார்த்தையில் உன் பெயர் இல்லாமல் இருக்காது.. காத்திருக்கிறேன் நான்...

என்னோட காதலி

அட வாடி வாடீ என்னோட காதலி  உனக்காக காத்திருக்கேன் இங்கே தான் நானடீ உன் ஆசை நெஞ்சுல நான் வாழ துடிக்கிறேன் இது தெரிஞ்சும் தெரியாதது போல் நீ ஏன் நடிக்குற.. கட்டி முத்தம் நான் கேட்கல  காதோரம் நீ பேசு.. நீ திரும்பித்தான் பார்க்க வேண்டாம் கண்னே நீ பார்த்தா போதும்.. நீ சிரிச்சும் தான் பார்க்க வேண்டாம் மொரச்சலோ இன்னும் ஏங்கும்... என்ன வெறுத்தாலும் பிரச்சனை இல்ல என்ன பிரிஞ்சாதன் என் உயிரே இல்ல.. அடடடட வாடீ வாடீ என்னோட காதலி......

ஏக்கம்

தேவதை என்ற கற்பனைக்கு தேகம் கொண்டவளோ தேடி தான் பார்க்கிறேன் உன்னில் என்னை தெரியாமல் வீசிய கடைகண் பார்வைக்கு  தொலைந்து போனது என் துாக்கம் கடவுள் கவி கொண்டு படைத்தானோ உன்னை படிக்க எனக்கு இவ்வளவு ஆர்வம் உன்னை காணாத நாள் எல்லாம் நெஞ்சுகுள் ஏக்கம் ஏக்கத்திலும் ஒரு சுகம் அந்த ஏக்கத்திலும் நீ இருப்பதாள்.

உன் கால் கொலுசாய் மாற

மொழி பேச உன் செவ்வாய் போதும் உன் மொழி பேச உன் பாதமே போதும்.. சத்தமில்லாத முத்ததை கூட காட்டி கொடுத்து விடுகிறது உன் கொலுசு.. உந்தன் கொலுசும் மறந்து போகும் சத்தமிட உன் உரசலின் கிறக்கத்தில் என்ன வரம் வாங்க வேண்டும் உன் கால் கொலுசாய் மாற....

காதல்

சொல்லாமல் சொல்லும்  சொல்லிய வார்த்தை உள்ளத்தை கிள்ளும் கண்கள் கண்ட கனவுக்கு  காதல் என்று பெயர்...

மனசாட்சி இல்லாதவள்

இந்த குடைக்குள் பெய்யும் மழை நீர் நான் மறந்த மன்னவனின் கண்ணீர் துளியோ ஏங்காதே என்னை நினைத்து எந்தன் நாளோ இங்கே குறைவு நான் இருக்கும் வரை கவலை படு நான் இறந்த பிறகு மறந்து விடு.... இப்படிக்கு மறக்க நடித்த மனசாட்சி இல்லாதவள்

உனக்காக

மழலை பாதத்தில்  மருதாணி வாசம் மகாராஐா ஆனேன் உன்னை நான் மணந்ததால்  மச்சம் வைச்ச மிச்சத்தில் என் மனதையும் வைக்கிறேன்.... தயக்கம் கொள்ளாதே தாங்கி கொள்கிறேன் உன் பாதங்களை மட்டுமல்ல உன் ஏக்கங்களையும்... உனக்காக உன்னில் நான்

காத்திருக்கிறேன்

சாயந்திர நேரம் சந்திப்போம் என்றாய் அந்திசாய்ந்த நேரத்தில்  ஆறு மணி நேரமாய் இங்கு நானும் இருக்கிறேன் ஈ கூட இங்கில்லை உனக்காக காத்திருக்கிறேன் ஊமை விழி மட்டுமே என்னோடு இருக்கிறது ஏன் இந்த ஏமாற்றம் ஐ கொண்ட கண்கள்லால் ஒரு முறை என்னை கண்டால் போதும் ஓடி போகும் என் கலக்கம் காதலியே காத்திருக்கிறேன் காணாத நெஞ்சோடு கலங்கிய கண்ணோடு காத்திருக்கிறேன் நான்.....

I LOVE YOU

பிரிவு என்று ஒன்றுமில்லை என் மனமோ உன்னை விட்டு தூரமில்லை கண்ணீர் துளிக்கோ காரணமில்லை கன்னி உந்தன்மேல் வைத்த காதலுக்கு அளவே இல்லை மனம் விட்டு பேச நீயும் இல்லை மனதை விட்டுவிட்டு யாரிடமும் பேச தோனவில்லை ஒருநாள் ஒரு பொழுது உன்னை கண்டால் போதும் ஒரு நொடி சிரிப்பு உன் கண்ணில் தெரிந்தால் போதும் உன் சிரிப்பிற்காக என் வாழ்க்கையும் இழப்பேன்..... I LOVE YOU........

மிருகம்

ஆண் ஐ பொறுத்தவரையில் பெண் எப்பொழுதும் குழந்தை தான் அவன் கண்ணீர் துளி சிந்தும் போது  மிருகமாகிறான்.....

பேரழகி

கண்ணகி கண்ணழகி கவிதை மொழியழகி கவிசோலை முகழகி முத்துசிரிப்பழகி முடிசூடிய முத்தழகி ஒற்றை மச்சத்தில் கொள்ளை கொண்ட பேரழகி நாணம் கொண்ட நடையழகி நான் பார்க்கவில்லையே உன்னை நேரில்

சொக்கி போறேன்

அடியே என்னடீ மாற்றமிது... அழகாக சிரிக்குற.. அருமையா பேசுற.. அன்பான தருணம் அமைஞ்சது இப்போது கிடைத்தலோ மரணம் சந்தோசம்..  கிள்ளி பார்க்கிறேன் உன் கண்ணத்தை கனவு அல்ல கிறங்கி போறேன் உன் நெஞ்சத்தில் மயக்கமில்ல..... வாசம் வீசம் சுந்தர வாசுகி நானோ மறுவேன் உன்னால் வால்முகி பேச பேச ஆச சிரிப்பு வந்து கூச சொக்கி போறேன் இந்த ராசாாாா...... நான்

அவள் முகம்

அவள் முகம் காணாமல் ஆயிலும் குறைகிறதே இனியவளே உன்னை காண ஈரேழு உலகமும் சுற்றி வருவேனே உனக்காக நான் இருக்கிறேன் ஊமையாக இருந்து கொள்ளாதே என்னை நீ தான் வெறுக்கின்றாய் ஏன் என்று காரணம் புரியவில்லை ஐய பட்டு விலகாதே ஒன்றை மட்டும் சொல்லுகிறேன் எந்தன் ஓருயிர் நீ தானே நீ இல்லா வாழ்வு வாழ்வேனோ ஓளவை போல சொல்லி விட்டேன் ஃ போட்டு என் வாழ்கையை முடிக்காதே அன்புடன் காத்திருக்கும் நான்

aval

தலை குனிந்து நடந்தேன் ... வெட்கத்தினால் அல்ல உன் பாதச்சுவடை தேடி...

Un Vili

ஒவ்வொரு நாளும்  ஒவ்வொரு வார்த்தை கொண்டு உனக்காக ஒவ்வொரு வாக்கியமாக்கி பேச நினைக்கையில் உன் கடை கண் பார்வையில் உதிர்ந்து போகிறது எந்தன் நாளோ இஞ்ச் இஞ்ச் ஆக வலியை சேர்க்க என் வாழ்வின் வருத்தங்கள் கூட ஒன்றாய் கூட கண்ணீர் துளிகள் கணவாயாக பெருகும் வேளையில் உன் கடை கண் பார்வை பட்டு கரைகிறதே.... உன்னோடு பேசாத வார்த்தைகளுக்கும் உன்னோடு கடக்காத பாதைகளுக்கும் உன் கடை கண் பார்வையே பதில் இப்படிக்கு உன்னை மட்டும் உலகம் என சுற்றும் சுள்ளான்...........

En kathali

எந்தன் உயிரே உனக்காக காத்திருக்கவில்லை உன்னையே நான் காதலிக்கிறேன் என்றாது ஒருநாள் உன்னை மறந்திருந்தால்  அன்று தான் நான் கணடிப்பாக இறந்திருப்பேன் உன்னை விட்டு பிரிந்து இருந்தாலும் உன் நினைவுகளை விட்டு அல்ல காத்திருக்கிறேன் காதலுடன் நான்

Kanavu

கண்ணன்  காதலுமில்லை காத்திருக்கவுமில்லை கல்லூரி வாசலிலே கன்னி உன்தன் கண்னை கண்டதும் காத்திருந்த காதலும் கவியாக பொழிகிறது என்ன மொரைச்சு பாக்கல ஏதும் சிரிச்சு பேசல உன்னோடு இருக்கும் போது திரும்பி நடக்கல இருந்தலும் உன் மீது ஆசை குறையல ஒரு நாள் உன் உருவம் என் அருகே உன் கை விரலோ என் கைகோர்க்க இதலும் இதலும் உயிர் இணையில் சம்மதம் வந்த வேளையில் முடிவானது திருமண ஓலை எனக்கோ திருநாள் அன்று தான் திருமணநாள் திடீரென முதுகை தட்டவும் கலைந்து போனது கனவு......

En kathali

தினமும் அவள் முகம் பார்க்க முடியவில்லை...  ஆனால் அவள் பெயரை கேட்கிறேன் என் Phone ringtone ஆக

சகோதரி

அம்மாவின் கை ஊட்டாத போது அவள் கை ஊட்டும் அப்பா விடம் இல்லாத காசு அவள் கைகளில் இருந்து கிடைக்கும் ஆயிரமுறை திட்டினாலும் அன்பால் மட்டும் அடிப்பாள் அவள் ஆனால் அறை நொடி கூட அவளை பிரிந்து இல்லை இப்படி பட்ட சகோதரி எனக்கு இல்லை என்பதே வருத்தம்.... 😥 😥 😥

Vili

உன்னிடம் ஒன்றே ஒன்று கேட்க விரும்புகிறேன் உன்  கண் வழி என்ன அமிலம் ஆஆ... என் கோபமெல்லாம் கரைந்து விடுகிறது உன் ஒற்றை பார்வையில்.......

Kaththiruppu

கடவுள் படைத்த உயிரில் நீ அதிசயம் அது என்ன காதசைவில் பேசும் அதிசயம் மல்லி மணம் வீச மாமன் மனம் ஏங்க கொஞ்சம் அருகில் வாங்க கொஞ்சிடலாம் கொஞ்சி பேசிடலாம் மனதில் குடி கொண்ட பெண்ணே என் மனையில் குடியேர வா வருவாய் என வாழ்க்கை முழுவதும் என் வீட்டு வாசலில் காத்திருக்கும் நான்

Unakka nan

நான் என் அருகே யாருமில்லை நீ உன் அருகே நானுமில்லை இருந்தாலும் காதல் காரணமில்லாமல் கண்களில் கண்ணீர் துளி காரணம் நீ என்பதால் உயிரில் வலி பேசி கொள்ளாதவரின் வலியை விட பேசாமல் கொல்லும் உன் வலியே பெரிது..... பேசி விடு இல்லை இப்படியே பேசாமல் விடு

valthukal

எந்தன் கன்னிக்கும் கண்ணியம் கொண்ட அன்பிற்க்கும் அந்த அன்பிற்க்கு ஏங்கும் உள்ளத்திற்கும் நல் உள்ளம் கொண்ட அனைத்து பெண்களுக்கும் மகளிர் தின வாழ்த்துகள்

Vali

கொடி ஏற்ற விருப்பமில்லை கோடி மக்கள் இருந்தும் இலட்ச மக்கள் மீது தடியடி எப்படினு யோசிக்க நேரமில்லை நீ அடித்த அடியை மறந்து விட்டால் தமிழனுக்கு ரோசமில்லை அடி வாங்கிய ஒருவன் ஓட்டளித்தால் அவன் தமிழனே இல்லை...... கோல விற்பனையை தடை பன்ன முடியும் கோல உற்பத்தியை தடை பன்ன முடியாது மது புகை உயிருக்கு கேடு விளம்பரம் உண்டு அதன் உற்பத்திக்கு தடை இல்லை தலை நிமிர்ந்து சொல்வதில் இல்லை தமிழன் செயல் வீரனே தமிழன்

Vali

காக்கி சட்டை போட்டதும் காவல்க்கு தான் என்று நினைத்தேன் கடும் கோபம் ஏணோ கால் கடுக்க நிற்க வைத்ததாலோ கண்ணீர் வருகிறது நீ அடித்தது கூட வலிக்க வில்லை நீயே என்னைஅடிக்கின்றாய் என்பதுதான் என் வலி

Pirivu

யாராது செல்லும் போது திரும்பி பார்பது  என் வேலை  இல்லை என்றாது உன்னை காண்பானா நான் பார்க்கும் வேளை......

Kanavu

வித விதமாக உடையணிந்து வீதியிலே நான் நடந்து வந்தேன் ஒருவன் விண்மீன் என்கிறான் மற்றொருவன் விடியல் நிலவு என்கிறான் என்னை கடந்தவன் வானவில் என்கிறான் என் காதோரத்தில் காதல் தீவு என்கிறான் கண் விழித்தால் மணிஆகிறது இன்னுமா தூங்கிறனு திட்டு